நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 24 அன்று பெரிய அளவில் நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருக்கிறது. சென்னையில் நடக்கும் விழா நிகழ்ச்சியை முடித்து விட்டு உடனடியாக லண்டன் கிளம்பி போகிறாராம் விஜய். குடும்பத்துடன் கிறிஸ்மஸ் & புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்து விட்டு ஜனவரி முதல் வாரம் திரும்ப இருக்கிறார் விஜய் .
வந்தவுடன் சென்னையில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் புரொடக்ஷனில் லோகேஷ்கனகராஜ் இயக்க இருக்கும் விஜய் 67 படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது . முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சுமார் பத்து நாட்கள் நடக்கிறது. அதன்பின் விஜய் 67 படக்குழு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்கள்.
துப்பாக்கி படத்துக்குப் பிறகு அதிகநாட்கள் வட இந்தியாவில் நடைபெறவிருக்கும் விஜய் படத்தின் ஷூட்டிங் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.