ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வரும் நிலையில் தற்போது பெரிய அளவில் அப்படக்குழு பிரமோசன்களை முடுக்கி விட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் விஜய். அப்போது அவர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்றைய தினம் இரண்டாம் கட்டமாக மீண்டும் பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்துள்ளார் விஜய். இந்த சந்திப்பில் வாரிசு படத்தை வெளிமாவட்டங்களில் மக்களிடம் கொண்டு சேர்க்க என்னென்ன விளம்பர யுக்திகளை செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்புக்கு பின் வழக்கம்போல் பிரியாணி விருந்தும் தடபுடலாக நடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இப்படி அடுத்தடுத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக அடையாள அட்டையுள்ள விஜய் ரசிகர் மன்றத்தினரே இந்த சந்திப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.




