ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகி பாபு. காமெடியாக நடித்துக் கொண்டே பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, பொம்மை நாயகி, மலை போன்ற படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் . அடுத்து எச்.வினோத் இயக்கும் படத்திலும் நாயகனாக நடிக்கப்போகிறார். மேலும் படப்பிடிப்புக்கு செல்லும் இடங்களில் இடைவெளியில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் யோகி பாபு. அவர் படப்பிடிப்பு தளங்களில் கிரிக்கெட் விளையாடும் வீடியோக்களும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் யோகிபாபுவின் கிரிக்கெட் ஆர்வத்தை கருத்தில் கொண்ட விஜய் அவருக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை அனுப்பி வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அந்த கிரிக்கெட் பேட்டை கையில் வைத்துக்கொண்டு போட்டோவை வெளியிட்டுள்ள யோகி பாபு, இந்த பேட்டை எனக்கு சர்ப்ரைஸா கொடுத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி என்று பதிவிட்டு இருக்கிறார்.