பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
பொன்னியின் செல்வனுக்கு முன், பொன்னியின் செல்வனுக்கு பின் என திரிஷாவின் திரையுலக பயணத்தை இரண்டாக பிரிக்கும் அளவுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியும், அதில் அவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பும் அவரது அடுத்த இன்னிங்ஸை மீண்டும் பரபரப்பாக துவங்கி வைத்துள்ளது. அந்த வகையில் பல வருடங்கள் கழித்து அடுத்து மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் புதிய முயற்சியாக வெப் சீரிஸிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் திரிஷா. இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகி வரும் பிருந்தா என்கிற வெப் சீரிஸில் நடித்துள்ள திரிஷா, இதில் முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் சூர்யா வங்கலா என்பவர் இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ளார்.
தெலுங்கில் தயாராகும் இந்த வெப்சீரிஸ் பின்னர் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த வெப்சீரிஸ் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள திரிஷா இதன் முதல் பாகம் 'ஆன் தி வெ' என்றும் கூறியுள்ளார்..