26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மலையாளம், மற்றும் தமிழில் முக்கிய கதாபாத்திரங்களிலும் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருபவர் அஞ்சலி நாயர். மோகன்லால், ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான திரிஷ்யம் 2 படத்தில் மோகன்லாலின் வீட்டிற்கு அருகிலேயே வசிக்கும் போலீஸ் உளவாளியாக நடித்திருந்தவர், இந்த அஞ்சலி நாயர் தான். அதுமட்டுமல்ல அண்ணாத்த திரைப்படத்தில் இளம் வயது ரஜினிகாந்திற்கு அம்மாவாக சிறப்பு தோற்றத்திலும் இவர் தான் நடித்திருந்தார்.
ஏற்கனவே திருமணமாகி இருந்த இவர் தனது முதல் கணவரை பிரிந்த நிலையில் இரண்டாவதாக கடந்த பிப்ரவரி மாதம் அஜித் ராஜூ என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே இவருக்கு ஒரு மகள் உள்ள நிலையில் கடந்த ஜூலை மாதம் இன்னொரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது தான் நடித்த படம் ஒன்றுக்கு டப்பிங் பேசுவதற்காக தனது கைக்குழந்தையையும் தூக்கிக்கொண்டு வந்த அஞ்சலி நாயர் குழந்தையை தனது மடியில் கிடத்தியபடியே தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
இது குறித்த புகைப்படம் ஒன்றையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் அஞ்சலி நாயர். கைக்குழந்தையுடன் இருந்தாலும் தன்னால் படத்தின் பணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக சிரத்தையுடன் அவர் டப்பிங் பேச வந்தது குறித்து நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.




