'சங்கராந்திகி வஸ்துனம்' ரீமேக்கில் அக்ஷய்குமார் | சிறிய படங்களுக்கு சிக்கலை தருகிறதா ரீ ரிலீஸ் படங்கள்? | அர்ஜூன் தாஸ், அன்னா பென் நடிப்பில் 'கான் சிட்டி' | ஜன 21ல் சுந்தர்.சி, விஷால் படத்தின் முதல் பார்வை வெளியீடு | இளையராஜாவுக்கு பத்மபாணி விருது | சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி |

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ள செய்தியை அவர்கள் வெளியிட்டதில் இருந்து சோசியல் மீடியாவில் சிலர் அதை சர்ச்சை ஆக்கி வருகிறார்கள். குறிப்பாக வாடகைத்தாய் விவகாரத்தில் அவர்கள் விதியை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நேரத்தில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். அதில், ‛‛ஒரு கணவன் - மனைவிக்கு பெற்றோர் ஆவதை விட சந்தோஷமான விஷயம் வேறு எதுவும் கிடையாது. இரண்டு அழகான குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகி உள்ள நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும், லீகல் தெரியும், மெடிக்கல் தெரியும் என்று சில முட்டாள்கள் உங்களது பொன்னான நேரத்தை வீணாக்குவார்கள். நீங்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்'' என்றும் தெரிவித்திருக்கிறார் வனிதா.




