இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் |
கவுதம் மேனன் - சிம்பு கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி உள்ள படம் ‛வெந்து தணிந்தது காடு'. சித்தி இட்னானி நாயகியாக நடித்துள்ளார். ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். செப்., 15ல் படம் திரைக்கு வர உள்ள நிலையில் இன்று(செப்., 2) படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாய் நடைபெறுகிறது. இந்த படத்தை தயாரிக்கும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த விழா நடக்கிறது. இதற்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக பிரமாண்ட அரங்குகள் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணி நடந்து வந்தது.
இதனிடையே லேட்டஸ்ட்டாக இந்த விழாவிற்கு நாயகன் சிம்பு, இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார்களாம். இதற்காக கடந்த சில நாட்களாக ஒத்திகையும் நடந்துள்ளது. மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் சிம்பு நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் என்பதாலும், கவுதம் - சிம்பு படம் என்பதாலும் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதனால் இசை வெளியீட்டு விழாவையும் இப்படி பிரம்மாண்டமாய் நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சி டிவி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.