ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகிய இருவரும் தங்களது சகோதரர்களான ராம்குமார் மற்றும் பிரபு ஆகிய இருவரும் சொத்தில் தங்களுக்கு பங்கு கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். அதனால் தங்களது தந்தையின் சொத்துக்களை தங்களுக்கு சேர வேண்டிய பங்கினை உரிய முறையில் பிரித்து வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.
தற்போது சாந்தி தியேட்டர் வளாக சொத்துக்களை விற்பனை செய்யும் முயற்சியில் ராம்குமார், பிரபு ஈடுபட்டுள்ளதாக அந்த சொத்தை விற்பனை செய்வதற்கு இடைக்காலை தடை விதிக்க வேண்டும் என்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்கள். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், சாந்தி தியேட்டர் வளாகத்தை ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம் ராம்குமார், பிரபு ஆகியோர் விற்பனை செய்ய ஈடுபட்டிருப்பதாக சொல்லி அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார்கள்.
அதையடுத்து ராம்குமார் தரப்பு வழக்கறிஞர்கள், சாந்தி தியேட்டர் விற்பனை நடைமுறைகள் ஏற்கனவே முடிந்து விட்டது. அதன் பிறகுதான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்று வாதாடினார்கள். அதோடு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வழக்கறிஞர்களும், 2010ம் ஆண்டிலேயே சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் கை மாறி விட்டதாகவும், கட்டுமான பணிகள் முடிந்த பிறகு தான் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தங்கள் சார்பில் வாதாடினார்கள். இப்படி மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.