கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
பஹத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் மலையான் குஞ்சு. அறிமுக இயக்குனர் சஜிமோன் பிரபாகரன் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜூலை 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கடந்த மாதம் முன்பு வரை இந்த படம் ஓடிடியில் தான் வெளியாகிறது என கிட்டத்தட்ட உறுதியே செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் திடீரென படத்தின் ரிலீஸில் மாற்றம் ஏற்பட்டு இந்த படம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த திடீர் மாற்றத்திற்கு இரண்டு காரணங்கள் பின்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.. ஒன்று சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் பஹத் பாசிலின் நடிப்பு ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக பஹத் பாசனின் நான்கு படங்கள் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி வந்த நிலையில், விக்ரம் படத்தை தொடர்ந்து அவரது புதிய படத்தை தியேட்டரில் பார்த்து ரசிக்கவே ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு அவர் இரண்டாவதாக இசையமைத்துள்ள மலையாள படம் இது. புஷ்பா, விக்ரம் படங்களால் பஹத் பாசிலுக்கு ஏற்பட்ட மவுசு மற்றும் ஏ.ஆர் ரகுமான் இசை இந்த இரண்டும் சேர்ந்து இந்த படத்தை தியேட்டர் ரிலீஸ் ஆக மாற்றிவிட்டது என்றே மலையாள திரையுலக வட்டாரத்தில் பேசிக்கொள்ள படுகிறது..