பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் திரையரங்குகள் அதிக நாட்கள் மூடப்பட்டிருந்ததால் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின. சிறிய பட்ஜெட் படங்களாக வெளியாகி வந்த சமயத்தில் நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்களின் ஆகியோரின் எதிர்ப்புக்கு இடையே ஓடிடி தளத்தில் வெளியானது. இருந்தாலும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சூர்யா தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்த ஜெய்பீம் திரைப்படமும் இதேபோன்று ஓடிடி தளத்தில் தான் வெளியானது. இந்த படமும் வரவேற்பை பெற்றது.
அதேசமயம் இந்த இரண்டு படங்களையும் தியேட்டர்களில் பார்க்க முடியவில்லை என ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஒரு மனக்குறையும் இருந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. இந்த நிலையில் வரும் ஜூலை 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த இரண்டு படங்களும் சில தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மற்றும் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் இரண்டுமே உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வெற்றி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.