பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
ஆஹா கல்யாணம் என்கிற வெப்தொடரில் பவி டீச்சராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிகிடா. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. அதனால் இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற சென்ற பிரிகிடாவை அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்து விட்டார் பார்த்நதிபன். அதோடு படத்தில் நிர்வாணமாகவும் நடித்திருக்கிறார் பிரிகிடா.
இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: துணை இயக்குனராக சென்ற என்னை பார்த்திபன் முக்கிய கேரக்டரில் நடிக்கச் சொல்லிவிட்டார். முதலில் தயங்கினேன் பிறகு கதையும், அதற்கான முயற்சியும் என்னை சம்மதிக்க வைத்தது. கதைக்கு ஒரு நிர்வாண காட்சி தேவை அதை உன்னை போன்ற சினிமாவை நேசிக்கத் தெரிந்த ஒருவரால் தான் நடிக்க முடியும் என்றார். ஆனால் இதை எப்படி பெற்றோரிடம் சொல்லி புரிய வைப்பது என்பது எனக்கு சற்று நெருடலாக இருந்தது.
இருவருமே எனது பெற்றோரிடம் எடுத்துச் சொல்லி அவர்களின் சம்மத்தின் பேரில் நடித்தேன். அப்படி நடிப்பதற்கு பல டெக்னிக்கல் விஷயங்கள் இருந்தன என்றாலும் கதைப்படி அது நிர்வாண காட்சி தான். படத்தில் பார்க்கும் போது அது கவர்ச்சியாக தெரியாது, அதில் உள்ள புனிதம் மட்டுமே தெரியும் என்கிறார் பிரிகிடா.