'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் தொடர்ந்து பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்களில் நடித்து வருகிறார். மணிகர்னிகா படத்தில் ஜான்சி ராணியாக நடித்தார். தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்தார். இப்போது முன்னாள் பிரதமர் இந்திரா வேடத்தில் நடிக்கிறார். முன்னாள் பிரதமர் இந்திரா அமல்படுத்திய எமர்ஜென்சி காலத்தை மையமாக வைத்து 'எமர்ஜென்சி' பன்ற படம் உருவாகிறது. இதை இயக்கி, அவரது வேடத்தில் நடிக்கிறார் கங்கனா.
இதன் முதல்பார்வை போஸ்டர், வீடியோவை வெளியிட்டு, ‛‛எமர்ஜென்சி பர்ஸ்ட் லுக்கை வழங்குகிறேன். உலக வரலாற்றில் மிகவும் சக்தி வாய்ந்த, சர்ச்சைக்குரிய பெண்களில் ஒருவரை சித்தரிக்கிறது. எமர்ஜென்சி படப்பிடிப்பு தொடங்குகிறது" என்று குறிப்பிட்டு, படப்பிடிப்பு துவங்கியதாக கங்கனா அறிவித்துள்ளார்.
அதோடு அந்த வீடியோவில் இந்திராவின் உடல் மொழியை அப்படியே பிரதிபலித்துள்ளார் கங்கனா. மேலும் அந்த வீடியோவில், ‛‛எனது அலுவலகத்தில் எல்லோரும் என்னை மேடம் என்று அழைப்பதில்லை 'சார்' என்று தான் அழைக்கிறார்கள்'' என்பதை அமெரிக்க அதிபரிடம் தெரிவித்து விடுங்கள்'' என்கிறார்.