விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? |

தமிழ், தெலுங்கு படங்களில் பரவலாக நடித்து வருகிறார் வரலட்சுமி. இந்த நிலையில் இன்று 69வது பிறந்த நாளை கொண்டாடும் தனது தந்தையும் நடிகருமான சரத்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டு ஒரு பதிவும் போட்டுள்ளார் வரலட்சுமி. அந்த பதிவில், வயது என்பது வெறும் எண் மட்டும்தான். அதை நீங்கள் நிரூபித்து வருகிறீர்கள். எனக்கு மட்டுமின்றி உங்களை சுற்றி உள்ள பலருக்கும் நீங்கள் உத்வேகமாக இருக்கிறீர்கள். விடாமுயற்சி ஒழுக்கம் தான் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் உங்களை சிறப்பாக வைத்திருக்கிறது. கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு உள்ளது. அதனால் நீங்கள் எதை விரும்பினாலும் அது உங்களுக்கு கிடைக்கும். லவ் யூ டாடி. என்னுடைய இன்ஸ்பிரேஷன் ஆகவும், ரியல் ஹீரோவாகவும் இருப்பதற்கு நன்றி. அருமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள் டாடி என்று பதிவிட்டுள்ளார் வரலட்சுமி.




