பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

நேற்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், நடிகர் சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் வகுப்பில் தேர்வாகி உள்ளார். கணிதத்தில் 100 மதிப்பெண் பெற்றிருக்கிறார். அதையடுத்து தமிழில் 95 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும், அறிவியலில் 98 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 95 மதிப்பெண்களும் பெற்று இருக்கிறார். இப்படி தங்கள் மகள் தியா அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருப்பதால் சூர்யா-ஜோதிகா தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் உதவி பெற்று கல்வி பயின்ற மாணவர்களும் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிகப்படியான மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்களாம்.




