ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை நடைபெற்றுள்ளது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுக்கு ஒரு மெசேஜ் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதில், கடவுளுக்கு நன்றி. என் வாழ்க்கை அழகான மனிதர்களால் கடந்து வந்துள்ளது. அதற்கும் நன்றி. நல்ல உள்ளங்கள் நல்ல தருணங்களில் நல்ல மனிதர்களின் ஆசீர்வாதங்கள் எனக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் அழகான விஷயங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றியது.
இன்று முதல் என் வாழ்வு நயன்தாராவுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. என் தங்கமே, இன்னும் சில மணி நேரங்களில் நாம் இருவரும் ஒன்றாகவே மாறப்போவதை நினைத்து உற்சாகம் கொள்கிறேன். எல்லா நன்மைக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் மற்றும் எதிர்நோக்குகிறோம். எங்கள் அன்பான குடும்பம் மற்றும் சிறந்த நண்பர்களின் முன்பு அதிகாரப்பூர்வமாக ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம் என்று விக்னேஷ்சிவன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.