அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யாமேனன், ராஷீிசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக ஜூன் 8ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ள ராஷி கண்ணாவின் கிளிப் ஒன்ரை வெளியிட்டுள்ளார்கள். அதில், ராஷி கண்ணா, அனுஷா என்ற தனுஷின் பள்ளி தோழியாக நடித்திருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.