ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் அம்பேத்ரும், மோடியும் என்ற புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரையில் அம்பேத்கரின் சிந்தனைகளை மோடி நடைமுறைபடுத்தி வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதற்கு தனது தம்பி மூலம் பதிலளித்த இளையராஜா நான் மெட்டு போட்டுவிட்டால் அதை மாற்றி திரும்ப போட மாட்டேன். அதேபோல எனது கருத்தில் இருந்தும் பின்வாங்க மாட்டேன் என்ற அறிவித்தார்.
இந்த நிலையில் இளையராஜா, சமூகவலைதளத்தில் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஷோபனா நடித்திருந்த 'தளபதி' படத்தில் வரும் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' என்ற பாடலில் இடம் பெற்றிருந்த 'நான் உனை நீங்க மாட்டேன். நீங்கினால் தூங்க மாட்டேன். பாடுவேன் உனக்காகவே. இந்த நாள் நன்னாள் என்று பாடு' என்ற வரிகளை இளையராஜா பாடியிருந்தார்.
சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு 'நான் உனை நீங்க மாட்டேன்' என்று அவர் மோடியை மறைமுகமாக குறிப்பிட்டு பாடி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.