ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
உதயன், சகுனி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கன்னட நடிகையான பிரணிதா. கடந்தாண்டு தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்தார். தொடர்ந்து படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாடி, வாழ்த்து கூறினார் பிரணிதா. அதோடு தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் வெளியிட்டு, ‛‛தங்கள் வீட்டில் ஒரு தேவதையை எதிர்பார்த்து காத்திருப்பதாக'' கூறி கணவருடன் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளார் பிரணிதா.
அதோடு, தனது கணவரை கட்டிப்பிடித்தபடி மருத்துவமனையின் ஸ்கேன் ரிப்போர்ட்டையும், கர்ப்பத்தை உறுதி செய்யும் கருவியையும் கையில் பிடித்து காட்டியபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரணிதா.