‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

வினோத் இயக்கத்தில், அஜித் நாயகனாக நடித்து வெளிவந்த 'வலிமை' படத்தில் வில்லனாக நடித்தவர் தெலுங்கில் நாயகனாக நடிக்கும் கார்த்திகேயா. அஜித் படத்தின் வில்லன் என்பதால் அவரும் நடிக்க சம்மதித்தார்.
படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் படத்தில் நடித்த கார்த்திகேயாவுக்குப் பெரிய அளவில் பெயர் கிடைக்கவில்லை. படம் முழுவதும் அஜித்தே இருந்ததாலும், வில்லன் கதாபாத்திரம் அழுத்தமாக சித்தரிக்கப்படாததாலும் கார்த்திகேயாவில் வில்லனாக பெயர் பெற முடியவில்லை.
தெலுங்கில் ஏற்கெனவே சில வெற்றிப் படங்களில் கதாநாயகனாக நடித்த கார்த்திகேயா மீண்டும் அங்கு நாயகனாக நடிக்கப் போய்விட்டார். நேற்று அவருடைய 8வது படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் பிரசாந்த் ரெட்டி இயக்கும் படத்தில் அவர் நடிக்க உள்ளார். மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் இப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.