படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
நான் திருமணம் செய்ய இருக்கிறேன் என நேற்று கூறிய நடிகை யாஷிகா, இப்போது எனக்கு திருமண வாழ்த்து சொன்ன அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள் (ஏப்., 1) என கூறியுள்ளார். இது நெட்டிசன்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கி உள்ளது.
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த், பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு சில படங்களில் நாயகியாக நடித்தார். கடந்தாண்டு கார் விபத்தில் சிக்கி, தனது தோழியை பறிக்கொடுத்தவர். காலில் பலத்த அடிபட்டு சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது முழுமையாக குணமாகி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். பழையபடி போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் காட்டி வருவதோடு கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கும் பதில் அளித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று திடீரென தான் திருமணம் செய்ய போவதாக கூறினார். அதுப்பற்றி அவர் கூறுகையில், ‛‛நான் திருமணம் செய்ய இருக்கிறேன். என் பெற்றோர் சம்மதித்துவிட்டனர். இது செட்டிலாகும் நேரம். ஆனாலும் சினிமாவை விட்டு விலக மாட்டேன். எப்போதும் உங்களை மகிழ்விப்பேன். காதல் செட் ஆகாது, இது நிச்சயிக்கப்பட்ட திருமணம். அனைவரின் ஆசீர்வாதம் தேவை'' என்றார்.
![]() |