லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ள விடுதலை படத்தின் இறுதிகட்ட பணிகளை கவனித்து வருகிறார். இதற்கு பிறகு நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை விரைவில் துவங்க இருக்கிறார். இந்நிலையில் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக கருணாஸ் இணைந்துள்ளார்.
இது குறித்து கருணாஸ் கூறுகையில் "கிராமிய கானா பாடகராக என் கலையை வாழ்க்கையை தொடங்கியிருந்தாலும், இவ்வளவு பெரிய அடையாளத்தையும், அறிமுகத்தையும் கொடுத்தது சினிமாதான். தாய்மடியான தமிழ் சினிமாவில் முழு நேரமும் பயணிக்க முடிவெடுத்திருக்கிறேன். ஆற்றல்மிகு இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்ற உள்ளேன். கடைசிவரை கற்றுக் கொள்வது தான் சினிமாவின் சிறப்பு. என்னை இணைத்துக்கொண்ட வெற்றிக்கு நன்றி" என்றார்.