பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்க ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான 'ராதேஷ்யாம்' படம் நேற்று முன்தினம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.
பிரபாஸ் ரசிகர்கள் ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படத்தை எதிர்பார்க்க, படமோ ஒரு முழுநீள காதல் காவியமாக இருந்தது. பல தெலுங்கு ஊடகங்கள் இந்தப் படத்தை கடுமையாகவே விமர்சனம் செய்து எழுதியிருந்தனர். மெதுவாக நகர்கிறது, வெறும் காதல் மட்டுமே உள்ளது என்றெல்லாம் விமர்சித்திருந்தார்கள். படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவு இல்லையென்று செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் நேற்று படத் தயாரிப்பு நிறுவனம் படத்தின் முதல் நாள் வசூல் 79 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வசூல் பற்றி வந்த செய்திகளுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலடி கொடுக்க, விமர்சனங்களுக்கான பதிலடியாக படத்தின் இயக்குனர் ராதாகிருஷ்ணகுமார் பதிவிட்டுள்ளார். “பிரம்மாண்டமான வரவேற்புக்கு அனைவருக்கும் நன்றி. நாங்கள் அன்புடன் இந்தப் படத்தை எடுத்தோம், நீங்கள் பதிலுக்கு அன்பைப் பொழிகிறீர்கள். விமர்சனங்கள் தேவை அல்ல, ரிசல்ட்தான் மேட்டர், பிளாக்பஸ்டர் ராதேஷ்யாம்” என்று அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.