என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜூமுருகன். இதில் ஜோக்கர் படம் சமூக அவலத்தையும், அரசியல்வாதிகளின் பிடியில் சாமானியன் சிக்கித் தவிப்பதையும் நையாண்டியாக சித்தரித்து இருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இதை தொடர்ந்து ஜீவாவை வைத்து ராஜுமுருகன் இயக்கிய ஜிப்ஸி திரைப்படம் வரவேற்பை பெறாத நிலையில், அடுத்ததாக கார்த்தி நடிக்கும் படத்தை அவர் இயக்கப் போகிறார் என சொல்லப்பட்டு வந்தது.
இந்த படத்தின் கதை உருவாக்கத்திற்காக தென்காசியில் முகாமிட்டு தற்போது படத்தின் ஸ்கிரிப்ட் முழுவதையும் தயார் செய்து விட்டாராம் ராஜு முருகன். விருமன் படத்தை முடித்துவிட்ட கார்த்தி, தற்போது பிஎஸ் மித்ரன் டைரக்ஷனில் சர்தார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் வரும் மே மாதம் ராஜூ முருகன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.