ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் நடித்துள்ள அஜித் குமார் மீண்டும் தனது 61வது படத்திலும் வினோத் இயக்கத்தில் நடிக்க போகிறார். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். தற்போது வலிமை படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் வருகிற மார்ச் மாதம் முதல் அஜித் 61வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது.
அதற்கான செட் போடும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் 61ஆவது படத்தில் இணையும் சில பிரபலங்கள் குறித்த ஒரு தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், நடிகர் பிரகாஷ்ராஜ், ஹிந்தி நடிகை தபு ஆகியோர் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல் வந்தது. இப்போது சின்னத்திரையில் பிரபலமாகி சினிமாவில் நடித்து வரும் கவின் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.