'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தமிழ், தெலுங்கில் 2017ம் ஆண்டு 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு மொழிகளிலும் இதுவரையில் 5 சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ளது. தமிழில் கமல்ஹாசன் கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். தெலுங்கில் முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி ஆகியோர் தொகுத்து வழங்கினார். அடுத்த மூன்று சீசன்களையும் நாகர்ஜுனா தொகுத்து வழங்கியுள்ளார்.
தற்போது ஓடிடி நிறுவனங்களுக்கு ரசிகர்களிடத்தில் வரவேற்பு கூடி வரும் நிலையில் தெலுங்கிலும் ஓடிடிக்கென பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பிக்கத் திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரையில் 15 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நாகார்ஜுனா தான் ஓடிடி பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கப் போகிறாராம். டிவிக்காக என்ன சம்பளம் வாங்கினாரோ அதே சம்பளம்தான் ஓடிடிக்கும் என்கிறார்கள். வரும் பிப்ரவரி 26ம் தேதி இந்நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது.
தமிழில் ஓடிடி பிக்பாஸ் நிகழ்ச்சி 'பிக்பாஸ் அல்டிமேட்' என்ற பெயரில் ஜனவரி 30 முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.