ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

'புஷ்பா' நாயகனாக அல்லு அர்ஜுன் குடும்பத்தாருக்குச் சொந்தமான ஓடிடி நிறுவனம் 'ஆஹா'. இந்நிறுவனம் தற்போது இந்திய ஓடிடி சந்தையில் சர்வதேச ஓடிடி நிறுவனங்களான அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றுடன் போட்டி போட்டு களத்தில் இறங்கியுள்ளது.
தற்போது பல தமிழ்ப் படங்களையும் இந்நிறுவனம் வாங்கியுள்ளது. சமுத்திரக்கனி நடித்த 'ரைட்டர்' படம் நாளை மறுநாள் பிப்ரவரி 11ம் தேதி இந்த ஓடியில் வெளியாக உள்ளது. அடுத்து சரத்குமார் நடிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ள 'இரை' என்ற ஓடிடி ஒரிஜனல் பிப்ரவரி 18ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிறுவனம் தெலுங்குத் திரையுலகத்தின் ஆக்ஷ்ன் ஸ்டார் ஆன பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கிய 'அன்ஸ்டாப்பபிள்' என்ற டாக் ஷோ ஒன்றை நடத்தி வந்தது. தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் அதில் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சி இதுவரையில் 40 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளதாக ஆஹா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அவர்களது ஓடிடி தளத்தில் அதிகமாகப் பார்க்கப்பட்ட நிகழ்ச்சி இதுதான் என்றும் தெரிவித்துள்ளார்கள்.