படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் காகித பூக்கள். எஸ்.முத்து மாணிக்கம் தயாரித்து, கதை எழுதி, இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக லோகன் மாணிக் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பிரியதர்ஷினி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் அப்புச்சி கிராமம் புகழ் பிரவீன் குமார் மற்றும் சமீபத்தில் மறைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் நடிகர் தவசி ஆகியோர் நடித்துள்ளனர். சிவபாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோஸ் நந்தா இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் முத்து மாணிக்கம் கூறியதாவது : குடி பழக்கத்தாலும், தனது பொறுப்பின்மையாலும் தனது அன்பான மனைவியை பிரிந்து வாடும் கணவன், மீண்டும் தனது உயிரை பணயம் வைத்து அவளை அடைகிறான். ஆனாலும் மனதில் ஏற்பட்ட வடுக்கள் மறையுமா..? ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை தவறவிட்டு விட்டால் மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பை திரும்பவும் அடைய முடியாது என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. என்றார்.