2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழில் 'துப்பறிவாளன், நம்ம வீட்டுப் பிள்ளை' படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அனு இம்மானுவேல். அவர் கதாநாயகியாக நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'மகா சமுத்திரம்' தெலுங்கில் படுதோல்வி அடைந்தது. தமிழில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டுவிட்டார்கள்.
அடுத்ததாக அவர் எந்த புதுப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. பேச்சு வார்த்தைதான் நடந்து வருகிறது. இந்நிலையில் கிளாமரான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவ்வப்போது இப்படியான புகைப்படங்களை வெளியிடுபவர்தான் அனு என்றாலும் நேற்று அவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அவர் அணிந்துள்ள மஞ்சள் நிற ஆடையும், அவருடைய பார்வையும் மிக அழகாக இருப்பதாகவும், அவருடைய கண்களும், சிரிப்பும் அவ்வளவு அழகு என்று 'சொல்(ஜொள்)'கிறார்கள் ரசிகர்கள். ஒரு ரசிகர் அவருடைய மூக்குத்திக்குக் கூட 'அந்த மூக்குத்தி இருக்கே மூக்குத்தி' என கமெண்ட் போட்டுள்ளார்.