டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் சமீபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது நினைவிடத்தில் சிவகார்த்திகேன், பிரபு, விஜய்சேதுபதி, சூர்யா உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிலையில் நடிகர் விஷாலும் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு அவரது வீட்டுக்கு சென்று சிவராஜ்குமாரை சந்தித்து ஆறுதல் சொன்னார்.
முன்னதாக பெங்களூரு அரண்மனை வளாகத்தில் நடந்த புனித் ராஜ்குமாரின் நினைவஞ்சலி கூட்டத்தில் விஷால் பேசியதாவது : புனித் ராஜ்குமாரின் இறப்பு செய்தியை என்னால் ஏற்கவே முடியவில்லை. அவர் மிக திறமையான நடிகர். புனித் ராஜ்குமார் இறந்த பிறகு 2 நாட்கள் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன்.
எனக்கு சொந்த வீடு இல்லை. வீடு வாங்க வேண்டும் என்று சிறிது பணத்தை சேமித்து வைத்துள்ளேன். வீடு பின்பு கூட வாங்கிக்கொள்ள முடியும். புனித் ராஜ்குமார் நடத்திய சக்திதாமா அனாதை இல்ல குழந்தைகளின் கல்வி செலவை நான் ஏற்கிறேன். இதற்கு அவரது குடும்பத்தினர் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்கிறேன்.
புனித் விட்டு சென்ற நல்ல பணிகளை நாம் தொடர வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். அனைவருக்கும் இதயம் உள்ளது. ஆனால் நல்ல பணிகளை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பது இல்லை. அவர் சமூக சேவைகளை வெளியில் தெரியாமல் செய்துள்ளார். நான் விளம்பரத்திற்காக இந்த கல்வி செலவை ஏற்பதாக கூறவில்லை. உள்ளபடியே அவரது இந்த நல்ல சேவையை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை செய்கிறேன்.
இவ்வாறு விஷால் பேசினார்.




