தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
2020ம் ஆண்டு கொரோனா முதல் அலையின் தாக்கத்தால் தியேட்டர்கள் 8 மாதங்கள் மூடப்பட்டன. அதனால், புதிய படங்களின் வெளியீடு குறைந்தது. அதுபோலவே இந்த 2021ம் ஆண்டிலும் கொரானோ இரண்டாவது அலையின் காரணமாக சுமார் 5 மாதங்கள் தியேட்டர்களை மூடியதால் புதிய படங்களின் வெளியீடு குறைந்தது.
2019க்கு சில வருடங்கள் முன்னதாக ஆண்டுக்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாவது வழக்கமாக இருந்தது. கடந்த வருடம் தியேட்டர்களில் 80க்கும் கூடுதலான படங்களும் ஓடிடி தளங்களில் 20க்கும் மேற்பட்ட படங்களுமாக மொத்தமாக 100 முதல் 110 படங்கள் வரையே வெளியாகின.
இந்த ஆண்டு ஓடிடி தளங்களில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கையே 40ஐ நெருங்கிவிட்டது. தியேட்டர்களில் 100ஐக் கடந்துள்ளது. இந்த வாரமும் அடுத்த வாரமும் சில படங்கள் தியேட்டர்கள், ஓடிடி என வெளியாக உள்ளன. இந்த வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதமான அடுத்த மாதத்தில் எப்படியும் 30க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.
தியேட்டர்கள், ஓடிடி வெளியீடுகள் இரண்டையும் சேர்த்தால் இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.