'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சூப்பர் ஹீரோக்கள் மாதிரி சூப்பர் ஹீரோயின் படங்களும் அவ்வப்போது வெளிவரும். வொண்டர் வுமன், பிளாக் விடோ ஹாலிவுட் படங்கள் அந்த வகையை சேர்ந்தது. இந்தியில் கிரிஷ், தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படங்களும் சூப்பர் ஹீரோ படங்கள் தான். தற்போது ஜெய் நடிப்பில் உருவாகும் பிரேக்கிங் நியூஸ், டொவினோ தாமஸ் நடிக்கும் மின்னல் முரளி படங்களும் சூப்பர் ஹீரோ படங்கள் தான்.
இந்த நிலையில் சூப்பர் ஹீரோயின் படமாக உருவாகி வருகிறது கிரவுன் என்ற படம். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் மற்றும் அரபிக் மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இதில் சூப்பர் ஹீரோயினாக மிஸ்.இந்தியா பட்டம் வென்ற அதிதி வர்ஸ் நடிக்கிறார். மேலும் ஹாலிவுட், அரபிக், சீனா, தென் கொரியா நாட்டைச் சேர்ந்த நடிகர்களும் இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர்.
படத்தை நரேன் பிரநிஸ் ராவ் என்பவர் இயக்குகிறார். இவர் மலேசிய தமிழர். ஜோகி சர்மா, பொன்சங்கர் மற்றும் கே.பி பிரபு ஆகிய மூவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்கள், மரியா ஜெரால்டு இசை அமைக்கிறார். கியுபிரேம் மூவி சார்பில் டாக்டர் அரவிந்த். மற்றும் ஒயிட் சாண்ட் புரோடக்சன்ஸ் சார்பில் அபய் குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.