விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' | பிளாஷ்பேக்: நடிகர் திலகத்தின் திரைப்படத்தில் அறிமுகமான இளைய திலகம் | ஜனநாயகன் பட விவகாரம் ; விஜய் தரப்பு மேல்முறையீட்டு மனு: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் | ''அனைவரும் நல்லா இருக்கணும்'' - ரஜினி பொங்கல் வாழ்த்து | சின்னத்திரையில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் இல்லையே.. .. | மாடுகளை நானே குளிப்பாட்டுவேன்: அட...டா... அதுல்யா | 'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா |

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் படம் அண்ணாத்த. நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த பத்தின் டிரெய்லர், பாடல்கள் வரவேற்பை பெற்று வருகின்றன. பல மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்திம் கன்னட மொழி பதிப்பும் வெளியாகவிருக்கிறது.
இந்தநிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் கன்னட மொழி பதிப்புக்கு ரஜினிகாந்த் கதாபாத்திரத்திற்கு நடிகர் சாய் குமார் குரல் கொடுத்திருக்கிறார் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. நடிகர் சாய் குமார் ரஜினி நடித்த பாட்ஷா படத்தின் தெலுங்கு பதிப்பில் ரஜினிக்கு குரல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து நடிப்பில் பிசியாகிவிட, பாடகர் மனோ தான் ரஜினிக்கு தெலுங்கு படங்களில் டப்பிங் பேசி வந்தார். இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த படத்தின் கன்னட பதிப்புக்கு சாய் குமார் டப்பிங் கொடுக்கிறார்.