ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மலையாளத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான 'பிரேமம்' படத்தில் நிவின்பாலியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தவர் ஷராபுதீன். அதைத் தொடர்ந்து பல படங்களில் கதையின் நாயகனாகவும் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தயாரிப்பாளராகவும் மாறி 'தி பெட் டிடெக்டிவ்' என்கிற படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 16ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பதற்கு இவர் ஒரு வித்தியாசமான பாணியை கையாண்டு தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது மோகன்லால் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான ராவண பிரபு படம் கடந்த வாரம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தில் மோகன்லால் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இதை கான்செப்டாக வைத்து இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ஷராபுதீன் மோகன்லால் உடன் போனில் பேசுவது போலவும், அவரிடம் நான் என்னிடம் இருந்த பணத்தை எல்லாம் வைத்து 'தி பெட் டிடெக்டிவ்' என்கிற ஒரு படத்தை தயாரித்து உள்ளேன். ஒரு மோகன்லால் என்றாலே சமாளிக்க முடியாது. இதில் இரண்டு மோகன்லால்கள் வேறு.. அதனால் உங்கள் ராவண பிரபு ரிலீஸ் தேதியை மாற்றி வைத்த கொள்ள முடியுமா என்றும் கேட்கிறார். அதற்கு போனில் அந்த பக்கம் மோகன்லால், ராவண பிரபு படத்தில் இடம்பெற்ற வசனமான “இது ஒரு விளையாட்டு.. இதில் ஜெயிப்பதற்காக தான் நான் விளையாடுகிறேன் மோனே.. புரிகிறதா?” என்று கேட்க ஓகே ஓகே என தலையாட்டுகிறார் ஷராபுதீன்.
அப்படியானால் நான் என் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக் கொள்கிறேன் என்று கூறி அக்டோபர் 16ம் ரிலீஸ் தேதி என்று அறிவிக்கிறார். இப்படி இவர் காமெடியாக தனது படத்தின் ரிலீஸ் தேதியை புதிய பாணியில் அறிவித்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோவில் கேட்கும் மோகன்லாலின் குரல் ஒரு மிமிக்ரி கலைஞரால் பேசப்பட்டுள்ளது.