மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! | அட..டா... மதுரை சாப்பாடு: அமீனா ரபீக் ஆனந்தம் |

த்ரிஷ்யம் பட புகழ் ஜீத்து ஜோசப் தற்போது மோகன்லால் நடிக்கும் டுவெல்த் மேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்த உடன் அடுத்து இயக்க இருக்கும் படம் பற்றி அறிவித்துள்ளார். புதிய படத்திற்கு "கூமன்: தி நைட் ரைடர்" என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஆசிப் அலி கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் ரெஞ்சி பணிக்கர், பாபுராஜ் மற்றும் ஜாபர் இடுக்கி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
இதுகுறித்து ஜீத்து ஜோசப் கூறியிருப்பதாவது: இது ஒரு புதிய முயற்சியாக உருவாகும் த்ரில்லர் வகை படம். தலைப்பு பற்றி இப்போது விளக்கமாக கூற முடியாது. ஆனால் கதைக்கும், தலைப்புக்கும் சிறப்பான பொருத்தம் இருக்கும். ஆசிப் அலி அவரது கேரியரில் நடித்திராத ஒரு கேரக்டரில் நடிக்கிறார். வருகிற 24ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. என்றார்.
மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு தனி இடத்தில் அமைந்திருக்கும் ஒரு ரிசார்ட்டில் நடக்கும் இரவு பார்ட்டியின் பின்னணியில் உருவாகும் த்ரில்லர் படம். என்கிறார்கள்.