டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் டிரைவிங் லைசென்ஸ். மறைந்த பிரபல கதாசிரியரும் இயக்குனருமான சாச்சி எழுதிய இந்தக்கதை ஒரு முன்னணி ஹீரோவுக்கும் அவரது ரசிகருக்கும் எதிர்பாராமல் ஏற்படும் ஈகோ மோதலை பின்னணியாகக் கொண்டு சுவாரசியமாக உருவாக்கப்பட்டிருந்தது. முன்னணி ஹீரோவாக பிரித்விராஜ், அவரது ரசிகராக மோட்டார் வாகன ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு இருவரும் சிறப்பாக நடித்திருந்தனர்.
எந்த மொழிக்கும் பொருந்தக்கூடிய கதையம்சம் கொண்ட இந்தப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இந்தப்படத்தில் பிரித்விராஜ் கேரக்டரில் அக்சய் குமாரும் சுராஜ் வெஞ்சரமூடு நடித்த கேரக்டரில் நடிகர் இம்ரான் ஹாஷ்மியும் நடிக்கிறார்கள் என செய்தி வெளியாகியுள்ளது. அக்சய் குமார் நடித்த குட் நியூஸ் என்கிற படத்தை இயக்கிய ராஜ் மேத்தா என்பவர் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். பிரபல தயாரிப்பாளர் கரன் ஜோகர் இந்தப்படத்தை தயாரிக்கிறார். இந்திக்காக கதையில் சிறிய மாற்றங்கள் சிலவற்றை செய்துள்ளார்களாம்.