மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! | அட..டா... மதுரை சாப்பாடு: அமீனா ரபீக் ஆனந்தம் |

இந்தியா சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர், ஹிந்தியில் தனது அந்நியன் படத்தை ரீ-மேக் செய்கிறார். விக்ரம் நடித்த அந்நியன் வேடத்தில் ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று(ஏப்., 14) வெளியாகி உள்ளது. பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார். அடுத்தாண்டு மத்தியில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.
இதுப்பற்றி ஷங்கர் கூறுகையில், ‛‛ஹிந்தி மொழியில் “அந்நியன்” படம் உருவாக மிகச்சிறந்த நடிப்புதிறன் கொண்ட, திரையினில் ரசிகர்களை கட்டிப்போடும் திறன் கொண்ட வசீகரம் மிக்க நடிகர் வேண்டும். அந்த வகையில் ரன்வீர் சிங் இன்றைய தலைமுறையின் இணையற்ற நடிகராக, தன் நடிப்பு திறனால் எக்காலத்திலும் அழியாத பாத்திரங்களால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அவருடன் இணைந்து இந்தியாவெங்கும் உள்ள ரசிகர்களுக்காக “அந்நியன்” படத்தை மீளுருவாக்கம் செய்வது மிக மகிழ்ச்சி. தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை வென்ற இந்த அழுத்தமிகு கதை, இந்திய ரசிகர்கள் அனைவரையும் கவரும் எனும் நம்பிக்கை உள்ளது. ரன்வீரும், நானும் இப்படத்தினை ஹிந்தி மொழியின் ரசிகர்களுக்காக, அந்த கலாச்சாரத்திற்கு ஏற்றவாராக கதையினை மாற்றம் செய்து, மீளுருவாக்கம் செய்யும், எங்கள் கனவினை புரிந்து கொள்ளும் அற்புத தயாரிப்பாளராக டாக்டர் காடாவை பெற்றிருக்கிறோம். எல்லா வகையிலும் மிகச்சிறந்த படைப்பாக இப்படம் வெளிவரும் என்றார்.
ரன்வீர் சிங் கூறுகையில், ‛‛இயக்குநர் ஷங்கரின் அற்புதமான கற்பனையில் உருவாகும் படைப்பில் வாய்ப்பு கிடைத்ததை பெரும் ஆசிர்வாதமாகவே கருதுகிறேன். நாம் நினைத்து பார்த்திராத பல அரிய சாதனைகளை திரையில் நிகழ்த்தி காட்டியவர் அவர். என்றாவது ஒரு நாள் அவருடன் இணைந்து படம் செய்வேண்டுமென்பது எனது கனவு. இப்படம் ஒரு பெரிய மேஜிக்கை நிகழ்த்துமென உறுதியாக நம்புகிறேன். “அந்நியன்” போன்ற ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது, எந்த ஒரு நடிகருக்குமே பெரிய வரமாகும். இந்திய சினிமாவில் நான் மிகவும் மதிக்கக்கூடிய ஆளுமையான நடிகர் விக்ரம் அவர்கள் எவராலும் நிகழ்த்த முடியாத, மிகச்சிறந்த நடிப்பை இப்படத்தில் தந்திருந்தார். அவரை போல் நடிப்பது கடினம். வாழ்வில் கிடைத்திராத அரிய கதாப்பாத்திரம் இது . என் முழு உழைப்பையும் தந்து இந்த கதாபாத்திரத்தில் ரசிகர்களுடன் இணையும் மேஜிக்கை நிகழ்த்துவேன் என நம்புகிறேன். இயக்குநர் ஷங்கர் அவர்கள் ஒரு வரலாற்று ஆளுமை. அவருடன் பணிபுரிவதை, மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இப்படம் ரசிகர்கள் கொண்டாடும் படைப்பாக இருக்கும் என்றார்.