தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

நடிகை சன்னி லியோன் டிவி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்புக்காக கேரளாவுக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். இந்நிலையில் கேரள மாநிலம் பெரும்பாவூரைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஸ்ரீயாஸ் என்பவர், கேரள டிஜிபியிடம் நடிகை சன்னி லியோன் மீது பண மோசடி புகார் அளித்தார்.
அதில், சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நடிகை சன்னி லியோனை ஒப்பந்தம் செய்தேன். அதற்காக அவருக்கு.29 லட்சம் கொடுத்தேன். பணத்தைப் பெற்றுக்கொண்ட சன்னி லியோன், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து கேரள குற்றப்பிரிவு போலீசார், திருவனந்தபுரத்தில் தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் சன்னி லியோனிடம் விசாரணை நடத்தினர். சன்னி மீது வழக்கு பதிவு செய்யப்படலாம். அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது.
இந்த நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு சன்னி லியோன் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், பலமுறை நிகழ்ச்சியை ஒத்தி வைத்தனர். பிறகு பஹ்ரைனில் நடப்பதாகக் கூறினார்கள். ஆனால், நடக்கவில்லை. 2019 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தேன். ஒப்பந்தத்தின் படி எனக்குச் சம்பளம் தர மறுத்துவிட்டனர். அதனால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
என் தரப்பில் நான் சரியாக இருந்தேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியாக நடந்து கொள்ளவில்லை. இதனால் இந்த புகார் போலியானது முறையற்றது. இந்த வழக்கில் என்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க வேண்டும். என்று தனது மனுவில் சன்னி லியோன் கூறியிருக்கிறார்.