டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. இதன் படப்பிடிப்பிற்காக அவ்வப்போது ஐதராபாத் வந்து செல்கிறார். அப்படி வந்து செல்லும்போதெல்லாம் ஐதராபாத்தில் பல பகுதிகளில் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் மகேஷ்பாபு, ராஜமவுலி, வில்லனாக நடிக்கும் நடிகர் பிரித்விராஜ் ஆகியோருக்கு இடையே எக்ஸ் பக்கத்தில் நடந்த சுவாரசியமான உரையாடலில் மகேஷ்பாபு ராஜமவுலியிடம், “நீங்கள் எப்போது சார் மகாபாரதத்தை ஆரம்பிக்க போகிறீர்கள் ? ஏற்கனவே நம்முடைய தெலுங்கு பெண் ஒருவர் (பிரியங்கா சோப்ரா) கடந்த ஜனவரியில் இருந்து இதற்காகவே ஐதராபாத் வீதிகள் ஒன்று விடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்” என்று பிரியங்கா சோப்ராவை குறிப்பிட்டு கிண்டல் அடித்திருந்தார்.
அதற்கு தற்போது கிண்டலாக பதில் சொல்லும் விதமாக விடியற்காலையில் ஐதராபாத் தெருக்களில் தான் எடுத்த சில புகைப்படங்களை மகேஷ்பாபுவின் பெயரை குறிப்பிட்டு பகிர்ந்து கொண்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. அது மட்டுமல்ல, “ஹலோ ஹீரோ நீங்கள் படப்பிடிப்பு தளத்தில் என்னிடம் சொன்ன கதைகளை எல்லாம் வெளியில் நான் லீக் பண்ண வேண்டும் என விரும்புகிறீர்களா?” என்றும் கிண்டலாக கேட்டுள்ளார்.