சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு, 2025ம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் அதிரடி திரில்லர் திரைப்படமான ' துரந்தர் ' படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஆதித்யா தர் இயக்கியுள்ளார். இவர் உரி : தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
இதில் ரன்வீர் சிங் தவிர, சஞ்சய் தத், அக் ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டு நிமிடம் 40 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ பார்த்தவர்களுக்கு இரண்டு சர்பிரைஸ். இந்த படத்தில் தெய்வத்திருமகள் படத்தில் விக்ரம் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் ‛பேபி' சாரா ஹீரோயினாக வருகிறார். மாறுபட்ட கெட்அப்பில் மாதவனும் நடித்து இருக்கிறார். இந்த படம் தமிழிலும் டப்பாக வரும் என தெரிகிறது. டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழில் சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு, ஹலிதா சமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி போன்ற படத்தில் சாரா நடித்திருந்தார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வனில் சின்ன வயது ஐஸ்வர்யாராய் கேரக்டரில் வந்தார். கொட்டேசன் கேங் என்ற படத்தில் தம் அடிப்பவராக நடித்து சர்ச்சையை கிளப்பினார். இப்போது ஹிந்தியில் தன்னை விட 20 வயது அதிகமான ஹீரோவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.