சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு |
மலையாளத்தில் குறிப்பிடத்தக்க நடிப்புத் திறமை கொண்ட நடிகையாக அறியப்படுபவர் இளம் நடிகை நிமிஷா சஜயன். அதைத் தொடர்ந்து தமிழில் சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது போச்சர் என்கிற வெப்சீரிஸில் நடித்து வருகிறார் நிவிஷா சஜயன். தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதை மையப்படுத்தி அதன் பின்னால் உள்ள அரசியலை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ நடித்து வருகிறார்.
எம்மி விருது வென்ற இயக்குனர் ரிச்சி மேத்தா இந்த வெப் சீரிஸை இயக்குகிறார். அமேசான் பிரைம் ஒரிஜினலுக்காக உருவாகி வரும் இந்த வெப் சீரிஸை எட்டனல் சன்சைன் புரொடக்சன் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வெப் சீரிஸில் தன்னை ஒரு நிர்வாக தயாரிப்பாளராக இணைத்துக் கொண்டுள்ளார் பாலிவுட் நடிகை ஆலியா பட். வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்து இந்த வெப் சீரிஸ் உருவாகி வருகிறது என்பதை அறிந்து தானாகவே இதன் தயாரிப்பில் இணைந்து கொண்டதாக கூறியுள்ளார் ஆலியா பட். வரும் பிப்ரவரி 23ஆம் தேதி முதல் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாக உள்ளது.