சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா |

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த ஹிந்திப் படம் 'பதான்'. இப்படம் தற்போது 1000 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் கட்ட வெளியீட்டிலேயே உலக அளவில் 1000 கோடி வசூலைக் கடந்த முதல் ஹிந்தித் திரைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தியாவில் மொத்த வசூலாக 623 கோடி, நிகர வசூலாக 516 கோடி, வெளிநாடுகளில் மொத்த வசூலாக 377 கோடியை வசூலித்துள்ளது 'பதான்'.
இதற்கு முன்பு 1000 கோடி வசூலித்த படங்களாக 'பாகுபலி 2, கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர், டங்கல்' ஆகிய படங்கள் இருக்கின்றன. அவற்றில் டங்கல் மட்டுமே ஹிந்திப் படம், மற்ற மூன்று படங்களும் தென்னிந்திய மொழிப் படங்கள். சீனா வெளியீடு இல்லாமலேயே 'பதான்' படம் 1000 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
'டங்கல்' படம் இந்தியாவில் வெளியான ஆறு மாதங்களுக்குப் பிறகு சீனாவில் வெளியாகி அங்கு மட்டுமே 1300 கோடி வசூலைப் பெற்றது. முதல் கட்ட வெளியீட்டில் அப்படம் மொத்தமாக 700 கோடி மட்டுமே வசூலித்தது. அதனுடன் ஒப்பிட்டுத்தான் 'பதான்' படத்தின் வசூலை முதல் கட்ட வெளியீட்டிலேயே 1000 கோடி வசூல் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.