ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி |
மலையாளத்தில் திலீப் நடிப்பில் அடுத்ததாக வெளியாக தயாராகி வரும் படம் வாய்ஸ் ஆப் சத்தியநாதன். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. திலீப்புடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்த தென்காசி பட்டணம் பட இயக்குனர் ரபி இயக்கி வருகிறார். கதாநாயகியாக வீணா நந்தகுமார் நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக சமீபத்தில்தான் நடிகர் ஜெகபதிபாபு இணைந்து, படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் புது வரவாக பாலிவுட் நடிகர் அனுபம் கெர் இணைந்துள்ளார். திலீப்பும் இவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மலையாளத்தில் பிரஜா, பிரணயம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அனுபம் கெர், இதற்கு முன்னதாக கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன் மலையாளத்தில் பிளஸ்சி இயக்கத்தில் வெளியான களிமண்ணு என்கிற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது