ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
கைதி படத்தில் டெரர் வி்ல்லனாக அறிமுமானவர் அர்ஜூன்தாஸ், மாஸ்டர், விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்தார். அந்தகாரம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜூன்தாஸ் தற்போது வசந்த பாலன் இயக்கும் அநீதி படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இது தவிர துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். மலையாளத்தில் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் உருவான அங்கமாலி டைரீஸ் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார்.
அந்தப் படத்தை கேடி என்கிற கருப்புதுரை, வல்லமை தாராயோ, கொலகொலயாய் முந்திரிக்கா, மூணே மூணு வார்த்தை படங்களை இயக்கிய மதுமிதா இயக்குகிறார். படம் குறித்து விரையில் முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட இருக்கிறது. இதற்கிடையில் மதுமிதாவும், அர்ஜுன் தாசும் மும்பையில் பணியாற்றும் படத்தினை மதுமிதா வெளியிட்டுள்ளார்.