தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்பார்கள் : சம்ரிதி தாரா | மூன்று மொழிகளில் உருவாகும் படம் 'ஓம் சிவம்' | அக்டோபர் 25ல் வெளிவரும் 'வெனம்' கடைசி பாகம் | பிரபு, வெற்றி நடிக்கும் அப்பா மகன் படம் | தெலுங்கு தமிழில் வெளியாகும் சமுத்திரக்கனி படம் | விஜய் 69-வது படத்தின் டெக்னீசியன் விவரம் வெளியானது | கவுதம் கார்த்திக் பிறந்தநாளில் வெளியான 19வது படத்தின் அறிவிப்பு | நவம்பர் 29ல் ஜப்பானில் வெளியாகும் ஷாருக்கானின் ஜவான் | பாலியல் குற்றச்சாட்டில் பிரித்விராஜ் உதவி இயக்குநர் சரண்டர் | ஆண் நடிகரின் பாலியல் குற்றச்சாட்டு பொய் : இயக்குனர் ரஞ்சித்தின் வழக்கறிஞர்கள் ஆதாரம் |
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படம் 2023 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பில் தற்போது நயன்தாராவும் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து 20 நாட்கள் அவர் ஜவான் படப்பிடிப்பில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது .இந்த நிலையில் இந்த ஜவான் படத்தில் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே நடிப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது இப்படத்தில் அவர் நடிக்கும் கேரக்டர் குறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது, இப்படத்தில் ஷாருக்கான் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதில் அப்பாவாக நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவும், மகனாக நடிப்பவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் வில்லனாக தெலுங்கு நடிகர் ராணா நடிக்கும் நிலையில், சானியா மல்கோத்ரா, ப்ரியாமணி ஆகியோரம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.