இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலிவுட்டில் கங்குபாய் காத்தியவாடி என்கிற படம் வெளியானது. நிஜமாகவே வாழ்ந்த கங்குபாய் என்கிற பெண் தாதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது. இதில் கங்குபாய் கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி இருந்தார். ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. தனது பட வேலைகள் காரணமாக இந்த படத்தை தியேட்டரில் பார்க்க முடியாமல் ஓடிடி ரிலீசுக்காக காத்திருந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தற்போது இந்த படத்தை பார்த்துவிட்டு தான் கண்ணீர் வந்துவிட்டதாக சோசியல் மீடியா பக்கத்தில் நெகிழ்ச்சியாக ஒரு பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தை பார்த்தேன்.. சஞ்சய் லீலா பன்சாலி தெறிக்க விட்டுள்ளார்.. நான் விருது தேர்வுக்குழு நடுவராக இருந்தால் இந்த படத்திற்கு 100 மதிப்பெண்களும், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு 100 மதிப்பெண்களும் ஆலியா பட்டுக்கு 100 மதிப்பெண்களும் நிச்சயமாக கொடுப்பேன்.. பல இடங்களில் இந்த படம் என்னை அழ வைத்து விட்டது.. நிஜ கங்குபாய் மீது மரியாதை ஏற்படுகிறது.. ஒரு சினிமா நடிகையாக வேண்டும் என்று வந்தவர் ஒரு முழு படமாகவே மாறிவிட்டார். படக்குழுவினருக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.. குறிப்பாக அஜய் தேவ்கனின் அற்புதமான நடிப்புக்கும்..” என்று கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்