மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தற்போது ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கியுள்ளார் ராஜமவுலி. ஜனவரியில் வெளியாக இருந்த அப்படம் கோவிட் பரவல் உள்ளிட்ட சில காரணங்களால் தள்ளிப்போய் விட்டது. இதையடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை அவர் இயக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த படத்திற்கும் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திரபிரசாத்தே கதை எழுதி வருகிறார்.
ஆனால் இந்த நேரத்தில் தற்போது பாலிவுட்டில் ஒரு புதிய செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. அதாவது, ஆர்ஆர்ஆர் படம் வெளியானதும் சிறிய பட்ஜெட்டில் ரன்பீர் கபூரை வைத்து ஒரு ஹிந்தி படத்தை ராஜமவுலி இயக்கப்போவதாகவும், அந்த படத்தை சில மாதங்களிலேயே இயக்கி முடித்த பிறகு மகேஷ்பாபு படவேலைகளை அவர் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ராஜமவுலி தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.