அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு |
பிரதமர் நரேந்திரமோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றார். அவர் சாலை மார்க்கமாக பயணிக்கும்போது திடீர் மறியல் போராட்டம் காரணமாக அவர் தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு டில்லி திரும்பினார்.
பிரதமர் பாதுகாப்பில் காட்டப்பட்ட மெத்தனம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதியை சந்தித்து இதுகுறித்து பேசி உள்ளார். ஒரு நாட்டின் பிரதமருக்கு அந்த நாட்டுக்குள்ளேயே பாதுகாப்பில்லாத சூழ்நிலையை உருவாக்குவது ஆபத்தானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் கூறுகையில், ‛‛பஞ்சாபில் நடந்தது அவமானகரமானது. பிரதமர் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர். அவர் மக்களின் குரல். அவர் மீதான தாக்குதல் என்பது ஒவ்வொரு இந்தியரின் மீதான தாக்குதலாகும். ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும் கூட. பஞ்சாப் தீவிரவாத நடவடிக்கைகளின் மையமாக மாறிக் கொண்டிருக்கிறது. அதனை நாம் இப்போது தடுக்கவில்லை என்றால் தேசம் ஒரு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியது இருக்கும். என்று எழுதியிருக்கிறார். கங்கனாவின் கருத்தை பலரும் ஆதரித்து வருகிறார்கள்.