Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கடல்

12 பிப்,2013 - 15:32 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கடல்

 

தினமலர் விமர்சனம்அந்தகாலத்து "அலைகள் ஓய்வதில்லை" ஜோடிகள் கார்த்திக்-ராதாவின் வாரிசுகள் கவுதம் கார்த்திக் - துளசி ராதா இருவரும் காதல் ஜோடிகளாக களம் இறங்கிட, மணிரத்னம் இயக்கி இருக்கும் படம்தான் "கடல்!" அது காதல் படமா, மோதல் படமா... கருத்து பரப்பும் படமா...? கடத்தல் படமா...? என்பதெல்லாம் ஆழ்கடல் போல அதன் இயக்குனர் மணிரத்னத்திற்கே புரியாத புதிராக இருந்திருக்குமோ...? எனும் சந்தேகத்தை கிளப்புகிறது "கடல்" படத்தின் திரை மொழியும், சில பல காட்சியமைப்புகளும்! டெக்னிக்கலாக கடல் படத்தின் பல காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு இருந்தாலும், மேற்படி புரியாதபுதிர் சமாச்சாரங்களால் தியேட்டரில் உடல்நெளியும் ரசிகர்களின் மனோநிலை "கடல்" படத்தின் பெரும் பலவீனம் என்றால் மிகையல்ல!!

கதைப்படி கிறிஸ்தவம் படித்து பாதிரியராக ஊழியம் செய்ய பிரியப்பட்டு வரும் பணக்கார இளைஞர் அரவிந்த்சாமி, அதே பிஷப் மடத்தில் பயிலும் ஏழை அர்ஜூனின் ஒழுங்கினங்களையும், சுயகட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையையும், மேலிடத்தில் சொல்லி அந்த குருகுலத்தை விட்டு அனுப்புகிறார். குடும்ப சூழலை சொல்லி, அர்ஜூன் எவ்வளவோ மன்றாடிக்கேட்டும் அரவிந்தசாமி அவரை போட்டுக் கொடுத்ததால் அங்கிருந்து கிளம்பும் அர்ஜூன், இதேமாதிரி ஒருநாள் நீயும் அவமானப்படுவாய் அன்று புரியும் என் நிலை... என்று சபதம் இட்டுவிட்டு கொடுஞ்செயல்கள் செய்யும் சாத்தானாக மாறிப்போகிறார். அந்த சாபத்தை மறந்து படித்து முடித்து பாதிரியராக ஓர் கடற்கரையோர கிறிஸ்தவ கிராமத்து பாழடைந்த சர்ச்க்கு வரும் அரவிந்த்சாமி, அந்த சர்ச்சையும், அந்த ஊர் மக்களையும் புதுப்பிக்கிறார். குறிப்பாக அந்த ஊர் மக்களால் அவனது இழி பிறப்பை காரணம் காட்டி அடியோடு வெறுத்து ஒதுக்கப்படும் ஒரு சிறுவனை ஓர் தூய கிறிஸ்துவனாக வளர்த்து ஆளாக்குகிறார்.

இச்சமயத்தில் அந்த ஊருக்கு வரும் சாத்தான் அர்ஜூன், அரவிந்த்சாமியை எப்படி பழி தீர்க்கிறார், என்பதோடு அவர் வளர்த்து ஆளாக்கிய கார்த்தி கவுதமையும் எப்படி தீய வழிக்கு இட்டு செல்கின்றார் என்பதும், அதிலிருந்து அரவிந்த்சாமி உதவியுடன் கெளதம் ‌எப்படி மீள்கிறார்? என்பதும் தான் கடல் படத்தின் கதை! இதனூடே அந்தப்பகுதியில் மருத்துவ சேவை செய்ய வரும் நர்ஸ் துளசி - கார்த்திக் கெளதமின் காதல் கதையையும், அவர் அர்ஜூனின் மகள் எனும் ப்ளாஷ்பேக்கையும் கலந்துகட்டி கடல் படத்தின் கதையை இழு இழுவென இழுத்து, ஏதோ கிறிஸ்தவ பிரச்சார படம்மாதிரி கடல் படத்தை பாவமன்னிப்பு, சாத்தான், தேவன், தேவதூதன் போன்ற வார்த்தைகளால் நிரப்பி போரடிக்க செய்து விடுகிறார்கள் இயக்குனர் மணிரத்னமும், கதை, வசனகர்த்தா ஜெயமோகனும். பாவம் ரசிகர்கள்!

கவுதம் கார்த்திக், துளசி, அரவிந்தசாமி, அர்ஜூன், லக்ஷ்மி மஞ்சு, பொன்வண்ணன், சிங்கம்புலி, கலைராணி உள்ளிட்ட ஓர் பெரும் நட்சத்திர பட்டாளத்தில் அரவிந்த்சாமியும், அர்ஜூனும், பர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்துவிட கவுதம் கார்த்திக்கும், துளசி ராதாவும் ஜஸ்ட் பாஸ் பண்ணி விடுகிறார்கள்!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் புரிந்தும் புரியாத ர(ரா)கம்! பின்னணி இசை படத்தின் பெரும்பலம். ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவு உலகத்தரம். குறிப்பாக அந்தக்ளைமாக்ஸ் கப்பல், கடல் சண்டைக்காட்சிகள், கடல்சீற்றங்கள் பிரமாதம், பிரமாண்டம்! சசிதர அடப்பாவின் ஆர்ட் டைரக்ஷனும் சேகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் அப்படியே! ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் ஜெயமோகனின் எழுத்தும், மணிரத்னத்தின் இயக்கமும் எடுபடாதது வருத்தம்!

மொத்தத்தில் "கடல்" டெக்னிக்கலாக "மிரட்டல்!" காட்சியமைப்புகளில் "குமட்டல்!!"--------------------------------------------------------

குமுதம் சினி விமர்சனம்


ஒரு டீ கோப்பைக்குள் சுறா மீனை அடைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

பாதிரியார் பணிக்குப் பயிற்சி எடுக்கும் அர்ஜுன், அஜால் குஜால் சமாசாரம் செய்வதை அரவிந்தசாமி பார்த்துவிட, வெறியேற்றப்படுகிறார் அர்ஜுன். போகும்போத “உன்னை சும்மா விட மாட்டேன்’ என்று சாத்தான் வசனம் பேசிவிட்டுச் செல்பவர் கொடூர கிரிமினல் ஆகிறார். அரவிந்தசாமி, பாதிரியாராக ஒரு சர்ச்சுக்கு வர, தன் காதலிக்கும் அரவிந்தசாமிக்கும் தகாத உறவு என்று கெட்ட பெயர் உருவாக்கி, கொலைப் பழியுடன் ஜெயிலுக்கு அனுப்புகிறார் அர்ஜுன். அந்தக் காதலியையும் க்ளோஸ் செய்துவிடுகிறார். இடையில் ஒரு கெட்ட பையனை(கௌதம்), அரவிந்தசாமி திருத்தி, நல்லவனாக ஆக்க, அவனையும் கொடூரமானவனாக ஆக்குகிறார் அர்ஜுன்.

அர்ஜுனின் மகளை அதாவது ஒரு பணக்காரரின் மனைவியை அர்ஜுன் கர்ப்பமாக்கி, குழந்தை பிறந்தவுடன் கணவன் மனைவி இருவரையும் கொன்று விடுகிறார். மகள் (துளசி) மட்டும் ஆசிரமத்தில் வளர்கிறாள். துளசியை கௌதம் காதலிக்க, அவளையும் கொலை பண்ண அர்ஜுன் முயற்சிக்க... என்னங்க தலை சுற்றுகிறதா? உங்களுக்கே அப்படி என்றால் 120 ரூபாய் டிக்கெட் எடுத்துப் பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும்? (கதை, வசனம் ஜெயமோகன்)

குறும்பு, காதல், மோதல், ஆக்ரோஷம், ஆட்டம், தவிப்பு, அழுகை என்று அத்தனை உணர்ச்சிகளையும் அற்புதமாகக் காட்டியிருக்கிறார் கார்த்திக்கின் புத்திரன் கௌதம். அப்பன் ஆறடி பாய்ந்தால் பையன் பதினாறு அடி பாய்ந்திருக்கிறது. கார்த்திக் போல் ஷூட்டிங் சொதப்பல் எல்லாம் பண்ணாமல் நல்ல பிள்ளையாக இருந்தால் ஒரு ரவுண்ட் வரலாம்.

“அலைகள் ஓய்வதில்லை’யில் அம்மாவைப் பார்த்தது போல் இருக்கிறார் துளசி. அவரின் சின்னச் சின்ன பார்வைகள் ரசிக்க வைக்கின்றன. மனநிலை வளராத பெண் என்ற பெரிய பாத்திரத்தைத் தூக்க சிரமப்படுவது தெரிகிறது.

பல வருடங்கள் கழித்து அரவிந்தசாமி. தியேட்டரில் அவர் தோன்றும் முதல் காட்சியில் கைதட்டுகிறார்கள் ரசிகர்கள். மனிதர் அப்படியே இருக்கிறார். அதுவும் அந்தப் பாதிரியார் பாத்திரம் கச்சிதம்.

இத்தனை நாள் காப்பாற்றி வந்த தேசிய நல்ல பெயரையெல்லாம் காற்றில் பறக்க விட்டிருக்கிறார் அர்ஜுன். என்னதான் அவர் நன்றாகச் செய்திருந்தாலும் இவ்வளவு கொடூரமான வில்லனாக அவரை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது.

ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம் என்றாலே தனி கவனம் செலுத்துவார் என்பது ஊரறிந்த ரகசியம். “நெஞ்சுக்குள்ளே’வும், “அடியே’வும் ஆளை அப்படியே சொக்க வைக்கின்றன.
தாயின் மரணத்தைக் கண்டு தவிக்கும் அந்தச் சிறுவனின் தாபமும், பிணத்தின் கால்களை ஒடித்து மூடும் ஊரரின் உணர்வும் கண்கலங்க வைக்கிறது.

ராஜீவ் மேனனின் கேமராவும், சசிதர அடப்பாவின் கலை வண்ணமும் கிராஃபிக்ஸும் உலகத் தரத்துக்கு இருக்கின்றன. அதுவும் க்ளைமாக்ஸில் நடுக்கடலில் படகில் நடக்கும் அந்தச் சண்டைக்காட்சி பிரமிக்க வைக்கிறது.

“மனிதனுக்கு பாவம் செய்யச் சொல்லித் தர வேண்டாம். நடக்கறா மாதிரி அது தானா வந்துடும்’ போன்று சில இடங்களில் ஜெயமோகன் எட்டிப் பார்க்கிறார்.

மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவுக்கு இப்படி ஒரு பாத்திரமா? ஐயோ பாவம்!

கடலோர கிராமம், சர்ச் என்று மூன்று மணி நேரம் அந்த உலகத்திலேயே இருந்த மாதிரி ஒரு உணர்வைத் தந்திருப்பதற்காக மட்டும் மணிரத்னத்தை பாராட்டலாம்!

க................டல்!

ஆஹா: கௌதம் கார்த்திக், ஏ.ஆர்.ரஹ்மான், ராஜீவ் மேனன்
ஹிஹி: திகட்டத் திகட்ட கதை


குமுதம் ரேட்டிங் - ஓகே

வாசகர் கருத்து

Ravi Kumar - chenni,இந்தியா
26 பிப்,2013 - 15:10
Ravi Kumar ரொம்பே போர் அடிக்குது
Ravi Kumar - chenni,இந்தியா
26 பிப்,2013 - 15:07
Ravi Kumar பாக்கவே முடியல சாமி. கடல்ல மூழ்கி செத்தே போயிட்டேன்
Vaal Payyan - Chennai,இந்தியா
19 பிப்,2013 - 12:23
Vaal Payyan திருட்டு DVD வரலாற்றீலேயே ... நஷ்டம் தந்த ஒரே படம் இது தான் ...
TAMILSELVAN - chennai ,இந்தியா
18 பிப்,2013 - 09:56
TAMILSELVAN கருமாந்திரம் உலகத்தில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளும் போட்டு திட்டுனா கூட மனசு ஆறாது அந்த அளவுக்கு மகா மகா கேவலமான குப்பை தூ நீ எல்லாம் ஒரு பெரிய டைரக்டர் வெளியில சொல்லாத சின்ன சின்ன டைரக்டர் எல்லாம் எப்படி பண்றாங்க பேசாம அவங்க கிட்ட ஒரு வருஷம் அசிஸ்டண்டா சேந்துக்க அப்பவாச்சும் நல்ல படம் கொடுபியானு பாப்போம்
sivabalan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16 பிப்,2013 - 14:49
 sivabalan வேஸ்ட் ஒப் டைம்.ஒரு பீர் அடிச்சிட்டு தூங்கலாம்
உப்க் - nagercoil,இந்தியா
15 பிப்,2013 - 14:07
 உப்க் The film is very very bad
ajin - nagercoil,இந்தியா
13 பிப்,2013 - 10:41
 ajin சிறப்பான படம்..... உங்களுக்கு மட்டும் புரியவில்லை ... மதம் பிடித்திருக்கிறது உங்களுக்கு????
thama - TORONTO,கனடா
12 பிப்,2013 - 10:25
 thama வணக்கம் மணிரத்தினம் அவர்களுக்கு கடல் இரு தடவை பார்த்து விட்டேன் பாடல்கள் நன்று, மூங்கில் காற்று மூலிகை வாசம் மிக இனிய பாடல். பிரியா, தோம ஸுடன் சேர்ந்து செல்லும் மருத்துவ காட்சி தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். [மருத்துவிச்சி பெண் பிரசவம் பார்க்கவேண்டும்] நீண்ட நாட்களின் பின் அரவிந்தசாமி நடிப்பு பிரமாதம் அமைதியான முகம் பாதிரியாருக்கு மிக பொருத்தம். அவரின் படங்கள் பார்க்க தவறுவதில்லை. படம் மிக மிக நன்று. தோமஸ், பிரியா நடிப்பு நன்றாக இருக்கு. சில உண்மைகள் வெளிக்காட்டி இருக்கு படம். படம் பார்த்து சமூகம் திருந்த சிறந்த படம். நன்றி அன்பான தமா இ
Karthikeyan - tirupur,இந்தியா
11 பிப்,2013 - 23:26
 Karthikeyan மணி சார், ப்ளீஸ் நீங்க ஒரு சாதனையாளர், முடிவு செய்ய கட்டாயத்தில் உள்ளீர்கள்
Aniruth - Puliyanthoppu,இந்தியா
11 பிப்,2013 - 22:52
 Aniruth பணம் குடுத்து இப்படி theatre ல தூங்க வச்சுட்டியே மணி..டொய்ன் டொய்ன் டொய்ன்...
arasou - evry,பிரான்ஸ்
11 பிப்,2013 - 03:06
 arasou பலர் கருத்து போல தெளிவில்லாத கதை. உணர்சிகரமான கிளைமாக்ஸ் மணியின் திமிரான வழக்கம் போலை இருட்டில் காட்சிகள். யு ஹவெ பெகோமே பட் இன் ராவணன் வொர்ஸ்ட் இன் கடல் ப்ளீஸ் கோ அண்ட் ரெஸ்ட் லீவ் us iruttil காட்சிகள்
குமட்டி - chennai,இந்தியா
09 பிப்,2013 - 09:29
 குமட்டி வரி ஏய்ப்புக்கு எடுத்த படம் மாதிரி உள்ளது. ஒரு அறிமுக இயக்குனர் புது முகம்களை வைத்து எடுத்து படம் மாதிரி உள்ளது. கொடுமை என்னவென்றால் இன்றைய புது முக இயக்குனர்கள் அருமையான படைப்புக்களை தருகிறார்கள் இப்படி இருக்க இந்த மாதிரி ஒரு படைப்பு மாஹா அதிருப்தியை தருகிறது. சரி இல்லாத வசனத்தை சரி இல்லாத முறையில் பதிப்பது ஒரு பெருமையா? ஒலி-ஒளியில் கவனம் தேவை(பாடல் காட்சிகளை தவிர்த்து). இரு பெரும் பயிதியதிர்க்கு பிறந்த குழந்தை போல் உள்ளது கதை.
சாவித்திரி - coimbatore,இந்தியா
09 பிப்,2013 - 02:24
 சாவித்திரி வொர்ஸ்ட் பிலிம். கதாநாயகன் அண்ட் கதாநாயகி nalla இல்லை. கார்த்திக் அண்ட் ராதா நடிப்புக்கு பக்கத்துல இவங்க வர mudiyathu.
ரகு - salem,இந்தியா
08 பிப்,2013 - 14:41
 ரகு இவருக்கு என்ன ஆட்சினே ஒன்னும் புரில...
டிங் டாங் - Chennai,இந்தியா
08 பிப்,2013 - 12:59
 டிங் டாங் மணி சார், படம் செம மொக்கை, போர்ந போர், செம போர் படம். எப்படி சார் உங்களால இப்படி அட்டு படம் பண்ண முடியுது. லிங்குசாமிக்கு சூப்பர்ர அப்பு வச்சிடிக மணிரத்னம் சார். ப்ளீஸ் ரிடயர் அய்யெடுக சார்.
mani - nagercoil,இந்தியா
08 பிப்,2013 - 02:45
 mani Mani sir, i'm a big fan of u. . But u really dissapointed me and u r fans. . Watchd at 1st show.
selvarajan - Paris,பிரான்ஸ்
07 பிப்,2013 - 16:08
 selvarajan மீனவர்களையும், கிருஸ்துவ மதத்தையும் கேவல படுத்துவதுபோல் இருக்கிறது. இந்த படத்தை வெளியிடுவதற்கு முன்பே தடை செய்திருக்க வேண்டும். கதை, இயக்கம், இசை, நடிப்பு என்று எதுவுமே சரியில்லை. இதுபோன்று படம் எடுத்து எதுக்கு காசை வீணாக்க வேண்டும்? நல்ல காரியங்களுக்கு பயன் படுத்தலாமே.
raj - kanchipuram,இந்தியா
07 பிப்,2013 - 14:48
 raj Arjun rajive menan rahman great. otherwise ha... ha... waste
murugan - rajapalayam,இந்தியா
07 பிப்,2013 - 13:29
 murugan ரஹ்மான் இசை சூப்பர்
sathis - singapore,சிங்கப்பூர்
07 பிப்,2013 - 10:55
 sathis மணிரத்னம் ப்ளீஸ் கிவ் ஹிட் பிலிம். ஐ அம யுவர் கிரேட் பேன்.
கர்ர்திகேயன் - tirupur,இந்தியா
07 பிப்,2013 - 10:17
 கர்ர்திகேயன் டியர் மணி சார், நான் உங்க ரசிகன். படம் பார்த்தேன். பாம்பே, ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால் மாதிரி படம் எடுத்துட்டு, எப்படி இப்படி ஒரு படம் எடுக்கிறீங்க. தயவு செய்து ஸ்க்ரீன் பிளே கொஞ்சம் புரியற மாதிரி எடுங்க.. வெரி போர் ராவணன் மாதிரி.
சரவணகுமார் - chennai,இந்தியா
06 பிப்,2013 - 12:15
 சரவணகுமார் மணி ரத்தினம் படம் என்றாலே எப்பவுமே இப்படி தான், அதனால யாரும் ஷாக் ஆக மாட்டாங்க.(எனக்கு பாலா,மணி ரத்தினம், சேரன் படங்கள் என்றாலே அலர்ஜி).
எஸ்.பானு - gummudipundi,இந்தியா
06 பிப்,2013 - 09:37
 எஸ்.பானு ரொம்ப ஓவர் பில்டப்பு. மொக்கை மணி சாரின் கடல் ஒரு பனால். நீர் ஒரு நல்ல படம் குடுத்து பதினைந்து வருஷம் ஆச்சு.
அவ்வை ஷண்முகி - Singapur,சிங்கப்பூர்
05 பிப்,2013 - 18:57
 அவ்வை ஷண்முகி 'ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் புரிந்தும் புரியாத ர(ரா)கம்' இது 100/100 செரியான விமர்சனம். நம்ம ஊர்ல ரஹ்மான் என்ன பண்ணாலும் விசுலடிக்க ஒரு கூட்டம் தயார் ஆயுடுச்சு..! bgm மட்டும் நல்ல இருக்கு...! பாடல் மோசம்..!!
இளையராஜா - sinagapore,சிங்கப்பூர்
05 பிப்,2013 - 18:30
 இளையராஜா மணி சார் ப்ளீஸ் நீங்க ரிட்டெட் ஆகிடுங்க ப்ளீஸ் இதுமாதுரி புரியாம இருட்டுக்குள்ள படம் எடுத்து எங்களை கொள்ளதீங்க
Prema - chennai,இந்தியா
05 பிப்,2013 - 16:05
 Prema படம் சூப்பர் , ஆனா அதுல நடிச்ச ஹீரோ ஹெரோஇன் தான் நல்லவே இல்ல .........
vasanth - chennai,இந்தியா
05 பிப்,2013 - 15:30
 vasanth வேஸ்ட் ஒப் money
ரா.துரை ராஜ். - kolappalur,இந்தியா
05 பிப்,2013 - 14:58
 ரா.துரை ராஜ். நல்ல பாடல்கள் மட்டும்
புதூர் மணி - madurai,இந்தியா
05 பிப்,2013 - 14:15
 புதூர் மணி நெஞ்சுக்குள்ல பாடல் சூப்பர் தாலாட்டு
shankaran - chennai,இந்தியா
05 பிப்,2013 - 12:04
 shankaran படம் விமர்சனம் பார்த்தே எங்களுக்கு போக பயம் vanthurichu
05 பிப்,2013 - 02:39
 அலட்டல் பீசு அடப்பாவமே! இதுக்குத்தான் இவ்வளவு buildup - ஆ ? நகத்தை காண்பிப்பேன், விரலை காண்பிக்க மாட்டேன் என்று. அதுவும் இந்த யானையை! தமிழ் ரசிகர்கள், நல்ல கதை இருந்தால், யாராக இருந்ததாலும் கொண்டாடுவார்கள். ஓவராக buildup கொடுக்கும் போதே தெரியும், எப்பொழுதும் போல ஒன்னும் இருக்காது என்று.
மங்கூஸ் மண்டையன் - பழனி அடிவாரம்,இந்தியா
05 பிப்,2013 - 01:22
 மங்கூஸ் மண்டையன் யப்பா சாமி, நீ எப்பவுமே யாருக்குமே புரியிற மாறி ஒரு படம் எடுக்க மாட்டியா? உன்னோட படத்துக்கு போறதுக்கு முன்னாடி பி.ஹெச்.டி எல்லாம் பண்ணிட்டு போனா கூட புரியாது போல இருக்கே. உனக்கு எப்பவுமே சொல்ல வந்த நறுக்குன்னு சொல்ல தெரியாதா? என்னை மாறி மங்கூஸ் மண்டயனுக்கு எல்லாம் எப்படி புரியும் உம்படம்? இதுக்கு நீ உட்ட பில்ட் அப் இருக்கே, கண்ண காட்ட மாட்டேன், மூக்க காட்ட மாட்டேன், மூஞ்சிய காட்ட மாட்டேன் ன்னு. நீ நெஜமாவே மனுசனுகளுக்கு தான் படம் எடுக்கிறியா இல்ல எதாச்சும் ஏலியன்ஸ்க்கு படம் எடுக்கிறியா? ஒரு எழவும் புரிய மாட்டேங்கிது. என்னமோ போ, நீயும் ஒரு பெரிய ஆளுன்னு இன்னும் ஊருக்குள சொல்லிக்கிட்டு.
கோடாங்கி - marudha ,இந்தியா
05 பிப்,2013 - 01:07
கோடாங்கி ரோஜா காஷ்மீர் தீவிரவாதம் ,நாயகன் பாம்பே தாத்தா பற்றி , பாம்பே பாம்பே கலவரம் ,அப்பால மகாபாரதத்த கேவலபடுத்த ஒரு படம் ,ராமாயணத்த கேவல படுத்த ஒரு படம் ,எல்லா படமும் ஒரே இருட்டு ,ஏகப்பட்ட பொக ,இப்போ அதே மேரி ரேஞ்சுல ஒரே கேவலமான புரியாத ஒரு படம் ,ஸ்ஸ் ..முடியலப்பா ,
ஜீவா - chennai,இந்தியா
05 பிப்,2013 - 00:36
 ஜீவா சின்ன குழந்தைங்க சேட்டை பண்ணினா பூச்சாண்டி வரான்னு சொல்லாமல், கடல் படத்துக்கு போகனுமானு கேளுகங்க. அவ்வளவுதான் அலறி ஓடிடுவாங்க.
ssss - india,இந்தியா
04 பிப்,2013 - 23:48
 ssss மணி சார் சூப்பர் ஸ்டார் அல்லது உலகநாயகன வச்சு சூப்பர் ஹிட் கொடுக்க போறாரு வெயிட் அண்ட் சி
அன்சாரி - tirunelveli,இந்தியா
04 பிப்,2013 - 22:52
 அன்சாரி ரொம்ப கேவலமான படம். இந்த படத்த ரசிகர்களுக்கு கொடுத்த மணிரத்தினம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
வைதீஸ் - dindugal,இந்தியா
04 பிப்,2013 - 21:46
 வைதீஸ் எ.ர.ரஹ்மான் மியூசிக் ரியல்லி super
nazeer - coimbatore,இந்தியா
04 பிப்,2013 - 19:13
 nazeer தயவு செஞ்சு யாரும் படத்துக்கு போயிராதீங்க...இப்படிக்கு உங்கள் நலம் விரும்பி.
kumar - aranthangi,இந்தியா
04 பிப்,2013 - 17:31
 kumar "ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் புரிந்தும் புரியாத ர(ரா)கம்" சும்மா எதாவது எழுதனும்ன்னு எழுத கூடாது.. பாட்டுதான் படத்துக்கு "First invitation ". so தினமலர் விமர்சனம் partiality உடன் இருப்பதால், உங்கள் கருத்தை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு ... சுய புத்தி உள்ள மனிதனை படம் பார்க்க போறேன். படம் பார்த்துவிட்டு மறுபடியும் இங்கு எனது கருத்தை பதிவு செய்கிறேன்
siva - madurai,இந்தியா
04 பிப்,2013 - 17:07
 siva உண்மையிலே கெளதம் நடிப்பு அவர் அப்பா நடிப்பை விட அருமையா இருக்கு.... படம் பாக்கலாம்.. பரவாயில்ல..
மொக்கையன் - chennai,இந்தியா
04 பிப்,2013 - 16:24
 மொக்கையன் பகல் நிலவு படத்த இரண்டாம் பாகம் எடுத்த மாதிரி இருக்கு !!!
muthu - karaikudi,இந்தியா
04 பிப்,2013 - 15:59
 muthu 'ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் புரிந்தும் புரியாத ர(ரா)கம்' சும்மா எதாவது எழுதனும்ன்னு எழுத கூடாது.. பாட்டுதான் படத்துக்கு "First  invitation ". so  தினமலர் விமர்சனம் partiality உடன் இருப்பதால், உங்கள் கருத்தை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு ... சுய புத்தி உள்ள மனிதனை படம் பார்க்க போறேன். படம் பார்த்துவிட்டு மறுபடியும் இங்கு எனது கருத்தை பதிவுசெய்கிறேன்
Aks - chennai,இந்தியா
04 பிப்,2013 - 15:33
 Aks கேவலம் இந்த மாதிரி ஒரு படத்த எப்படி ஒரு மனுஷனால எடுக்க முடிது.ஸ்டார்டிங் சீன்ஸ் ரொம்ப மனுஷ தன்மையே இல்லாம இருக்கு.
பாரதி - mettur,இந்தியா
04 பிப்,2013 - 14:26
 பாரதி மியூசிக் நாட் பட்
கணேஷ் - thoththukudi,இந்தியா
04 பிப்,2013 - 12:38
 கணேஷ் படம் சூப்பர் போர் .ராவன் படத்தைவிட மோசம் மணி retire ஆகும் காலம் வந்துவிட்டது
ஷக்தி - chennai ,இந்தியா
04 பிப்,2013 - 12:33
 ஷக்தி படம் சம மொக்க ., மணி சார் திரும்ப இந்த மாதிரி படம் எடுக்திங்க ., ரஹ்மான் ஒன் தி ஹீரோ ., ஆப் தி பிலிம் .,
RASI - chennai,இந்தியா
04 பிப்,2013 - 11:30
 RASI மணிரத்தினம்?....
சாந்தி சிவன் PILLAI - ABU DHABI,ஐக்கிய அரபு நாடுகள்
04 பிப்,2013 - 10:02
 சாந்தி சிவன் PILLAI மணிரத்தினம் படம் என்று முதல் நாள் ஷோ குடும்பத்துடம் போனேன். கதை தெளிவு இல்லை. என்ன என்று ஒரு எழவும் புரியவில்லை. A R ர்க்ஹ்மான் மியூசிக் ரியால்லி சுபெர்ப். ராஜீவ் மேனன் கேமரா, இதுவரை எந்த தமிழ் படத்துலயும் பார்த்தது இல்லை. கதை அப்படியுன்ன என்ன? புதுமை என்று பாமர மக்களுக்கு புரியும்படி படம் எட்டுகட்டும். கௌதம் கார்த்திக் அமேசிங். துளசி....இன்னும் நிறைய படிக்கணும். சின்ன பயன் ஒபென்னிங் சீன் அருமை. சாந்தி சிவன் பிள்ளை, அபு தபி.
டிங் டாங் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
04 பிப்,2013 - 08:41
 டிங் டாங் படம் சுத்த வேஸ்ட். மணிரத்னத்தின் அடுத்த அட்டு பிளாப் படம் தொடர்கிறது. மணிரத்னம் சரக்கு தீர்ந்துவிட்டது. ப்ளீஸ் சினிமால இர்ருது ரிடெயர் அயெடுக சார்.
rishi - chennai,இந்தியா
03 பிப்,2013 - 18:02
 rishi enakku therinji a r rahman music le ethuthan koncham tallana music erunthalum viththiyasamana but slow music பிலிம் பிரஸ்ட் ஆப் சூப்பர் செகண்ட் ஆப்? raஜிவ்மெனன் ஒளிப்பதிவு மிரட்டுது.பின்னணி இசை மிரட்டுகிறார் ரஹ்மான் பாடல்கள் பரவாயில்லை வசனம் சொதப்பல் திரைகதை சொதப்பல் டைட்டில் சூப்பர் , பொன்வண்ணன்,அரவிந்தசாமி நடிப்பு சூப்பர் முதல் சின்னபையன் நடிப்பு சூப்பர் கவுதம் கார்த்திக் நடிப்பு பரவாயில்லை மற்றவர்களெல்லாம் எதோ பணத்துக்காக நடிதவர்களாக தெரிகிறது
rishi - chennai,இந்தியா
03 பிப்,2013 - 17:46
 rishi olipathivu miratuthu music nallaerukkuthu direction paravayilla diologe sutha pore totala film first off super second off?
swaminathan - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03 பிப்,2013 - 17:13
 swaminathan மணிரத்னம் படம் என்று போனால் எமாற்றம் , திரை கதை சொதபல் .***
R.Manohar - Trichy,இந்தியா
03 பிப்,2013 - 16:31
R.Manohar ஐயய்யோ, மொக்க படம் சார், உட்கார முடியல! மணிரத்னம் படம் என்று போனால் கொடும. அவ்வளவுதான் அவரிடம் சரக்கு தீர்ந்துவிட்டது.
dinesh - usilampatti,இந்தியா
03 பிப்,2013 - 15:32
 dinesh அர்ஜுன் அரவிந்த்சாமி nadipu சூப்பர கௌதம் நடனம் சோக காட்சிகளில் நன்றாka நடிக்கிறார்.மௌன ராகம் கார்த்திக் இன் saayal தெரிகிறது.ரஹ்மான் ராஜீவ் மேனன் ராக்கிங் performance
saminathan - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03 பிப்,2013 - 15:22
 saminathan மணி படம் என போனால் ,disappointment கதை சரி இல்லை பாட்டும் சுமார்தான். , படு போர்**
செ.செய்யது உஸ்மான் - kuala lumpur,மலேஷியா
03 பிப்,2013 - 15:07
 செ.செய்யது உஸ்மான் பாடல்கள் மட்டுமே மிக்க நன்று; ஏலே கீச்சான் பாடல் உற்சாகத் துள்ளல், மூங்கில் தோட்டம்,நெஞ்சுக்குள்ளே பாடல்கள் மென்மை...
nooranoor - sankaranpandal,இந்தியா
03 பிப்,2013 - 13:47
 nooranoor கடலில் மீன் ilai,கருவாடு தான் இருக்குது.ஆனால் வாசம் இருக்கு
raju - chennai,இந்தியா
03 பிப்,2013 - 13:07
 raju பாவம்னா என்ன தெரியுமா இந்த படத்த பாகிறது தான்.... செம மொக்க ....
navani - safat,குவைத்
03 பிப்,2013 - 12:00
 navani MANI WAS MISSING IN STORY AND NOT HIGHLIGHTED THE YOUNG STARS. NOW WE UNDERSTAND WHY HE SELECTED NEW ARTISTS. EXISTING STARS WILL NOT ACCEPT TO DO THIS ROLE, SINCE THEY LOOK LIKE SIDE ACTORS. MAIN ACTORS ARE ARVIND AND ARJUN. IF YOU WANT TO SEE THE MOVIE GO WITHOUT THINKING MANI
saminathan - chennai,இந்தியா
03 பிப்,2013 - 11:52
 saminathan படம் படு மோசம், மணிரத்னடிற்கு என்ன ஆனது. ???????உட்காரமுடியவில்லை .
kumar - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
03 பிப்,2013 - 10:50
 kumar ஓவர் புஇல்டுப் கொடுத்தால் இப்புடித்தான் இருக்கும்.மணி சர்க்கல்லாம் ஓவர்
சல்மான் பாரிஸ் - Nidur,இந்தியா
03 பிப்,2013 - 10:25
 சல்மான் பாரிஸ் மணிரத்னம் மேல் இருந்த நல்ல அபிப்ராயம் போய்விட்டது.... சச்சின் ரிடையர் ஆன மாதிரி மணிரத்னம்மும் ரிடையர் ஆகிடலாம்....!!!
மதன் - muscat,ஓமன்
03 பிப்,2013 - 10:23
 மதன் இந்த படத்துக்குதான் முகத்த காட்டமாட்டேன், முதுக கட்டுவேன் ? சமிபகாலமாக அதிகம் பேசும் மணி, வேஸ்ட் of money .
sandal - sivakasi,இந்தியா
03 பிப்,2013 - 10:19
 sandal தியேட்டர் இல் சுனாமி இந்த படம் பாக்க யாரும் வந்து விடதேங்க.... இப்படிக்கு உங்கள் நலம் விரும்பும் புறா பாய்ஸ் .........
குமார் கோபாலன் - dammam,சவுதி அரேபியா
03 பிப்,2013 - 10:19
 குமார் கோபாலன் அர்விந்த் சுவாமி, அர்ஜுன், கெளதம் காக பார்க்கலாம் வித்தியாசமான கதை... கிளைமாக்ஸ் சண்டை உலகத்தரம்...
Ganesh - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03 பிப்,2013 - 10:12
 Ganesh மணிரத்னம் ஜஸ்ட் நல்ல கதைய செலக்ட் செய்து கொள்ளவேண்டும். இப்போ உள்ள சின்ன இயக்குனர்களிடம் போயி திரைகதை எப்படி உருவாக்க வேண்டும் என்று படிக்கட்டும். அபு தாபியில் படம் பார்த்தேன் படு போர்.
patturaja - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03 பிப்,2013 - 05:42
 patturaja கௌதம் நடிப்பு மற்றும் நடன காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார்..திரைக்கதை சரியாக அமையாதது படத்திற்கு பின்னடைவே
ஸ்ரீநிவாசன் - Coimbatore,இந்தியா
03 பிப்,2013 - 04:59
 ஸ்ரீநிவாசன் அப்போ அவ்ளதானா...! ராதாவின் வாரிசுகள் ரெண்டும் இப்போ அவுட்டாயிடுச்சு..!! மணிரத்னம் சொதப்பல் தொடருதுகிறது..!!!
ஸ்டான்லி - coimbatore,இந்தியா
03 பிப்,2013 - 02:17
 ஸ்டான்லி நிசே songs....
தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in