அரோவணா பிக்சர்ஸ் சார்பில் கரன் நாயகனாக நடிக்கம் படம் சூரன். கதையின் நாயகிகளாக அனு, ஷிபாலி ஷர்மா இருவரும் படத்தில் வருகிறார்கள். இவர்களுடன் மணிவண்ணன், பொன்வண்ணன், "பிதாமகன்" மகாதேவன், "அயன்" ஜெகன், சந்தான பாரதி, ராஜ் கபூர், நெல்லை சிவா, பார்வதி, சதீஸ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். வட சென்னையின் குறுகிய தெருக்களில் வலம் வரும் சூரன் என்கிறவனின் வாழக்கையை படமாக்கியுள்ளார்கள். யதார்த்தமான நிகழ்வுகளை, வட சென்னையின் மனம் மாறாமல் சொல்லியிருக்கிறார்களாம். சூரன் படத்தில் வழக்கமான காதல் காட்சிகள் காதல் டூயட் இல்லை.
மனம் போன போக்கில் சுற்றும் சூரனின் வாழ்க்கை பாதையில் குறுகிடும் உண்மையும் நியாயமும் முதலில் எதை புரிய வைக்கிறது என்பதுதான் படம். சென்னை கொளத்தூர், வியாசர் பாடி, பெரம்பூர், பர்மா பஜார் என மக்கள் திரளாக கூடும் இடங்களில் படமாக்கியுள்ளோம். மேலும்,கோயம்பேடு மார்கெட், குற்றாலம், செங்கோட்டை, சுந்தர பாண்டிபுரம், மூனாறு ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். பாலாஜி இசையமைக்க, சலீம் படத்தொகுப்பு செய்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்களும் எழுதி இயக்கியுள்ளார் பாலு நாரயணன்.