Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

லாரா

லாரா,Lara
26 டிச, 2014 - 17:49 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » லாரா

லாரா


அகடம் என்ற எடிட்டிங் இல்லாத திரைப்படத்தை எடுத்து கின்னஸ் உலகச்சாதனை படைத்த இயக்குநர் ஜே.எம்.இசாக் அவர்களின் இரண்டாவது படம் லாரா திகில் நிறைந்த படம். இப்படத்தில், புதுமுகம ஹரி, ஸ்ரீபிரியங்கா, கீதாஞ்சலி, வாஹினி நாயர், கணேஷ், சந்துரு, சேத்தன், காட்பாடி சண்முகம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.


கதைச்சுருக்கம்


காதல், நகைச்சுவை, திரில் நிறைந்த திகில் படம். வித்தியாசமான படங்கள் எடுக்கும் ஒரு இயக்குநர் கதை எழுதுவதற்காக யாரும் இல்லாத ஒரு தனிமையான இடத்திற்கு செல்கிறார். அவர் மீது சந்தேகிக்கப்படும் மனைவியும், அவருடன் செல்கிறார். இயக்குநர் கதை எழுத ஆரம்பிக்கும் போது தடங்கள் வந்துகொண்டே இருக்கிறது. கிளைமாக்ஸ் வரை இயக்குநர் கதை எழுத முடியாமல் தவிக்கிறார். அந்த தடங்களுக்கான விடை தேடும்போது ஒரு அதிர்ச்சி தகவல் அவர்களுக்கு கிடைக்கிறது. அந்த தகவலே அவருக்கு கதையாக கிடைக்கிறது. அவருடைய மனைவியின் சந்தேகமும் தீர்கிறது.


இப்படத்தின் படப்பிடிப்பு, புதுச்சேரி, மூணாறு, சென்னை அதன் சுற்றுப்புறங்கள் மற்றும் தலக்கோணம், கேரளா அச்சன்கோவில் அங்கு சுற்றியுள்ள அடர்ந்த காடுகளில் அதிபயங்கர திகில் நிறைந்த இரவு காட்சிகள் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த திரைப்படம், டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படுகிறது.

லாரா தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in